வியாழன், 23 ஜனவரி, 2020

ப்ளூ கார்னர் நோட்டிஸ்?

ப்ளூ கார்னர் நோட்டிஸ் (Blue Corner Notice):
ப்ளூ கார்னர் நோட்டிஸ் என்பது சர்வதேச காவல்துறை அனுப்பப்படும் விசாரணை நோட்டிஸாகும். இந்த நோட்டிஸானது, கிரிமினல் குற்றம் செய்துவிட்டு தலைமறைவான குற்றவாளி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது, அடையாளம் காண்பது, அல்லது பெறுவதற்காக அனுப்பப்படுவதாகும். இதற்கு முன்பாக ஐபிஎல் சேர்மனாக இருந்த லலித் மோடியை கண்டுபிடிப்பதற்காக ப்ளூ கார்னர் நோட்டிஸை அனுப்பியிருந்தது இண்டர்போல்.
ரெட் நோட்டிஸ் (Red Notice):
இந்த நோட்டிஸானது குற்றவாளி இருக்கும் இடத்தை தெரிந்துகொள்வதற்காகவும், தேடப்படும் குற்றவாளியை ஒப்படைத்தல் அல்லது இதேபோன்ற சட்டபூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ளும் நபர்களை கைது செய்வது ஆகியவற்றிற்காக அனுப்பப்படுவதாகும். இந்த நோட்டிஸானது குற்றவாளிகளை கைது செய்வதற்கு சர்வதேச அளவில் அனுப்பப்படும் வாரண்ட் ஆகும். இந்த நோட்டிஸானது, நீரவ் மோடி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்க தலைவன் மவுலானா மசூத் ஆசாருக்கு எதிராக இந்த நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டது.
Yellow நோட்டிஸ் (Yellow Notice):
இந்த நோட்டிஸானது காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்படும் நோட்டிஸாகும். இந்த நோட்டிஸானது சிறார்கள் அல்லது தாங்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக அனுப்பப்படுவதாகும். இந்த நோட்டிஸானது காணாமல் போனவர்கள் அல்லது தாங்கள் யார் என்பதை அறிந்து கொள்பவர்களது உடல் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டு அனுப்பப்படுவதாகும்.
ப்ளாக் நோட்டிஸ் (Black Notice):
இந்த வகை நோட்டிஸானது அடையாளம் காணமுடியாத உடல்களை கண்டுபிடிப்பதற்காக சர்வதேச காவல்துறையினரால் அனுப்பப்படுவதாகும். இவ்வகை நோட்டிஸானது ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட முறை அனுப்பப்படுகிறது.
க்ரீன் நோட்டிஸ் (Green Notice):
இந்த நோட்டிஸானது எச்சரிக்கை நோட்டிஸாகும். கிரிமினல் குற்றம் செய்த நபர் அதே போன்று வேறு நாடுகளிலும் செய்யலாம் என்று உளவு மற்றும் எச்சரிக்கை அளிக்கும் விதமாக வழங்கப்படும் நோட்டிஸாகும். தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவானவர்கள் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக பொதுவாக இந்த நோட்டிஸானது பயன்படுத்தப்படுகிறது.
Interpol-Notice-List
ஆரஞ்சு நோட்டிஸ் (Orange Notice):
இந்த நோட்டிஸானது பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அனுப்பப்படுவதாகும். பொதுமக்கள் அதிகம் கூடும் ஒரு நிகழ்விற்கோ, அல்லது நபருக்கோ, அல்லது பொதுமக்களுக்கு தீவிர அச்சுறுத்தலை கொடுக்கும் பொருள் உள்ளிட்டவற்றிற்கு வழங்கப்படுவதாகும். மனிதர்களுக்கு கெடுதலை விளைவிக்கும் மருந்துகள் குறித்தோ அல்லது உபகரணங்கள் குறித்து எச்சரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பர்ப்பிள் நோட்டிஸ் (Purple Notice):
இந்த நோட்டிஸானது குற்றவாளி குற்றம் செய்வதற்கு கையாளும் முறை குறித்து தெரிவிப்பதற்கோ அல்லது தெரிந்துகொள்வதற்கோ அனுப்பப்படுவதாகும். இதில் குற்றம் செய்ய பயன்படுத்தப்படும் பொருள், செயல்முறை, கருவிகள், குற்றத்தை மறைக்கும் முறைகள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு அல்லது தெரிவிப்பதற்கு சர்வதேச காவல்துறையால் அனுப்பப்படுவதாகும். இந்த நோட்டிஸானது சுற்றுச்சூழல் குற்றவாளிகளைக் கையாள்வதற்காக சர்வதேச காவல்துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்த வகை நோட்டிஸ் உதவுகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச காவல்துறையின் சிறப்பு நோட்டிஸ் (Interpol-United Nations Security Council Special Notice):
ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட தனிநபர் அல்லது அமைப்புகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இந்த நோட்டிஸானது இதுவரை 500க்கும் மேற்பட்ட முறை அனுப்பப்பட்டிருக்கிறது.

credit ns7.tv