கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு சாமியார் ஒருவர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பொது மேடையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவண்கரேவில், லிங்காயத் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பஞ்சமாசாலி மடாதிபதியான வச்சானந்தா சுவாமி பேசினார்., லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏ முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்றால், ஒட்டுமொத்த லிங்காயத் சமூகத்தின் ஆதரவையும் எடியூரப்பா இழக்க நேரிடும் என அவர் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா, இருக்கையை விட்டு எழுந்து, இது போன்று பேச வேண்டாம் என கோபத்துடன் மடாதிபதியிடம் தெரிவித்தார்.
பின்னர் மடாதிபதி வச்சானந்தா சுவாமியின் கால்களை தொட்டு வணங்கிவிட்டு எடியூரப்பா அங்கிருந்து புறப்பட தயாரானார். ஆனால் அவரை மடாதிபதியும் பிற அமைச்சர்களும் சமாதானப்படுத்தி அங்கு அமரவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய எடியூரப்பா, தாம் முதலமைச்சராகுவதற்கு பதவியை ராஜினாமா செய்த 17 எம்.ஏ.க்களுக்கு துரோகம் இழைக்க முடியாது என கூறினார். இல்லையெனில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூட தயார் என எடியூரப்பா கூறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
credit ns7.tv