நிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உரிய நேரத்தில் தூக்கிலிடப்படாததற்கு கெஜ்ரிவால் அரசு தான் காரணம் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டினார். இதற்கு ட்விட்டரில் வீடியோ மூலம் பதிலளித்துள்ள கெஜ்ரிவால், நிர்பயா விவகாரத்தை அரசியலாக்குவது தமது மனதை காயப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகள் உரிய நேரத்தில் தூக்கிலிடப்படாததற்கு தமது அரசு தான் முழு காரணமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்ற நடைமுறையை மாநில அரசுடன் தொடர்புபடுத்தி எவ்வாறு குற்றம்சாட்ட முடியும் எனவும் பாஜகவுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில் மக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் எனவும் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவோம் எனவும் அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
credit ns7.tv