டெல்லியில், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக மொத்தம் 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி தலைமை தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 275 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆயுத சட்டத்தின் கீழ் 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
109 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், அனுமதியின்றி வைக்கப்பட்ட சுமார் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் உரிமம் பெற்ற நான்காயிரத்து 700 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கலால் வரி சட்டத்தின் கீழ் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு கோடியே 33 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுளளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
credit ns7.tv