வெள்ளி, 17 ஜனவரி, 2020

மக்கள் தொகை கணக்கெடுப்பை செயல்படுத்துவது குறித்து இன்று ஆலோசனை!

Image
தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக, மக்களின் விவரங்களை சேரிக்கும் வகையில் மக்கள் தொகை பதிவேடும் நடத்தப்படும். ஆனால், இந்த முறை தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

இதில், பங்கேற்க அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் மக்கள்தொகை இயக்குநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் மேற்கு வங்க அதிகாரிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

credit ns7.tv