குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அந்த பதிவு நீக்கப்பட்டது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அந்த பதிவில், காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படம் இணைக்கப்பட்டிருந்தது. அதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
மேலும் தமிழக அரசு அங்கீகரித்த வள்ளுவர் படத்தை பயன்படுத்துங்கள் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, காவி ஆடை அணிந்த படம் நீக்கப்பட்டு, வெள்ளை ஆடை அணிந்த வள்ளுவரின் படத்துடன் மற்றொரு பதிவு பதிவிடப்பட்டது.
Remembering great Tamil Poet, philosopher and Saint, Thiruvalluvar on his Jayanti today.#Thirukkuṛaḷ, authored by him provides guidance to mankind on how to lead a noble life. #Thiruvalluvar #Tamil
இதைப் பற்றி 582 பேர் பேசுகிறார்கள்
இதனிடையே தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இதனையும் பலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
credit ns7.tv