குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதனை அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் கூற முடியாது என, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வழக்கறிஞருமான கபில் சிபில் தெரிவித்துள்ளார். அவ்வாறு செயல்படுத்த மறுப்பது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறினார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் கபில் சிபில் தெரிவித்தார்.
credit ns7.tv