வியாழன், 23 ஜனவரி, 2020

ஜனநாயக முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் பின்தங்கிய இந்தியா!

ஜனநாயக முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளது. 
இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பொருளாதார புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன்படி கடந்தாண்டுக்கான பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற 167 நாடுகள் முழுமையான ஜனநாயகம், வீழ்ச்சியடைந்த ஜனநாயகம், கலப்பு ஜனநாயகம், சர்வாதிகார ஜனநாயகம் என்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 
இந்த பிரிவில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கி 51வது இடத்திற்கு சரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018ல் இந்தியாவின் மதிப்பு 7.23 புள்ளிகளாக காணப்பட்ட நிலையில், 2019ல் இது 6.90 புள்ளிகளாக குறைந்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பின், தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கம், குடியுரிமை திருத்த சட்ட விவகாரம், வகுப்புவாத வன்முறைகள் ஆகியவைகளே இதற்கு காரணம் என தெரிகிறது. 
News7 Tamil
இந்த பட்டியலில் முதலிடத்தில்  நார்வேயும், 2வது, 3வது இடங்களில் முறையே ஐஸ்லாந்து, சுவீடன் நாடுகளும்  உள்ளன. இதில் பாகிஸ்தான் 108-வது இடத்திலும், இலங்கை 69-வது இடத்திலும் உள்ளன.
credit ns7.tv