எலக்ட்ரானிக் மற்றும் அச்சுவடிவ ஊடகங்களில் வேட்பாளர்களின் கிரிமினல் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடக்கோரிய உத்தரவை பின்பற்றிய போதும் அரசியலில் உள்ள கிரிமினல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கிரிமினல் பின்னணி குறித்த விவரங்களை வேட்பாளர்கள் ஊடகங்களில் வெளியிடுவதற்கு பதிலாக, அவ்வகை வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று அரசியல் கட்சிகளிடன் கூறலாம் என்று தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கினை விசாரித்த நீதிபதிகள் நாரிமன் மற்றும் ரவிந்திர பாத் அடங்கிய பெஞ்ச், வழக்கில் அரசியலில் இருந்து கிரிமினல் பின்னணி கொண்டவர்களை அகற்றும் பரிந்துரைகளை வாதியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யா, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து பரிந்துரை வழங்கலாம் என்றனர்.
கிரிமினல் பின்னணி கொண்டவர்களை அரசியலில் இருந்து அகற்றுவதற்கான முன்னெடுப்பு குறித்த அறிக்கையை
ஒருவார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ஒருவார காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
credit ns7.tv