credit ns7.tv
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ரஜினிகாந்த் திசை திருப்ப முயற்சிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த பேசிய கருத்துகள் தான் இவை. பெரியார் குறித்து ரஜினி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரஜினி வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழகத்தின் பல பகுதிகளில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது குறித்து சென்னை போயஸ் கார்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் இல்லாததை சொல்லவில்லை என்றும், நடந்ததை தான் கூறினேன் எனவும் கூறினார். மேலும், அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1971 ஆம் நடந்த பேரணி பற்றி தற்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். பெரியார் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தினார்.