சனி, 25 ஜனவரி, 2020

கனடாவில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக மாணவி மருத்துவமனையில் அனுமதி..!

Image
கனடா நாட்டில் கல்லூரியில் படித்து வந்த நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த மாணவியை, மர்மநபர்கள் கத்தியால் வெட்டியதில் படுகாயமுற்று, அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் மகள் ரேச்சல், கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கல்லூரிக்கு சென்ற போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரேச்சலினை வழிமறித்து கத்தியால் கழுத்தில் தாக்கியுள்ளனர். 
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரேச்சலினை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ரேச்சல் தாக்கப்பட்டது குறித்து, குன்னூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் கனடாவிற்கு புறப்பட்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு விசாவை உடனடியாக வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 
News7 Tamil
credit ns7.tv