துக்ளக் விழாவில் பேசியது குறித்து யாரிடமும் மன்னிப்புக் கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சேலத்தில் 1971ம் ஆண்டு நடத்தது, மறுக்க முடியாது உண்மை எனவும், அது மறக்க வேண்டிய சம்பவம் எனவும் கூறியுள்ளார். பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தான் குறிப்பிட்டு பேசினேன் என்று கூறிய ரஜினிகாந்த், அதற்கான ஆதராமாக சில செய்தித்தாள்களை காண்பித்தார்.
மேலும் பெரியார் பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்றும், பெரியார் குறித்து இல்லாத கருத்தை ஒன்றும் தெரிவிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அது தொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழக்கு திமுக அரசு தடை விதித்தது என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார். பெரியார் குறித்த ரஜினிகாந்த் கூறிய இந்த கருத்துக் எதிர்ப்பு கிளம்பிருந்த நிலையில் ரஜினிகாந்த் அது குறித்த விளக்கத்தை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
credit ns7.tv