சனி, 18 ஜனவரி, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம்!

Image
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த சட்டத்திற்கு மேற்கு வங்கம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கேரள அரசு முதல்முறையாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டமன்றத்திலும் ஆளும் காங்கிரஸ் அரசு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்தை கொண்டு வந்து அவையில் பேசிய அமைச்சர் பிராம் மோஹிந்திரா, குடியுரிமை திருத்த சட்டம் ஜனநாயகத்திற்கு புறம்பானது என்றும், மதரீதியில் குடியுரிமை வழங்குவது ஏற்புடையதல்ல எனவும் விமர்சித்தார்.

credit ns7.tv