மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பஜ்பேவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மூன்று வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. குடியரசுத் தினம் நெருங்கி வரும் நிலையில், விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பெங்கரூரு போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். அவரின் பெயர் ஆதித்ய ராவ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் விசாரிக்க மங்களூரு போலீசார் பெங்களூரு சென்றுள்ளனர்.
credit ns7.tv