வெள்ளி, 24 ஜனவரி, 2020

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் காரை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்...!

Image
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததை கண்டித்து எம்.பி. ரவீந்திரநாத் காரை இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பத்தில் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கம்பம் நோக்கி, ரவீந்திரநாத் குமார் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் செல்லும் வழிதடத்தை முன்பாகவே அறிந்திருந்த இஸ்லாமிய அமைப்பினர் கையில் கருப்பு கொடியுடன் காத்திருந்தனர். 
ரவீந்தரநாத் குமாரின் கார், கம்பம் சிக்னல் அருகே வந்த போது, திடீரென அவரது காரை வழிமறித்த இஸ்லாமிய அமைப்பினர் கையில் வைத்திருந்த கருப்பு கொடியை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள், கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
News7 Tamil
இதனிடையே, கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால், சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

credit ns7.tv

Related Posts: