வெள்ளி, 17 ஜனவரி, 2020

காஷ்மீர் பிரச்னை : தோல்வியில் முடிந்த சீனா மற்றும் பாகிஸ்தானின் முயற்சி!

Image
ஜம்மு காஷ்மீர் பிரச்னையை ஐநா பாதுகாப்பு சபையில் எழுப்ப சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து எடுத்த முயற்சி, பிற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் தோல்வியில் முடிந்தது. 
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு அதன் நட்பு நாடான சீனாவும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இது குறித்த விவாதத்தை பாகிஸ்தானும், சீனாவும் ஐநா சபையில் இரண்டு முறை எழுப்பின. ஆனால் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என தெரிவித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதனை விவாதிக்க மறுத்துவிட்டது. 
3வது முறையாக காஷ்மீர் குறித்த விவாதத்தை பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப முயற்சித்தது. அதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவிக்காததால் மீண்டும் நிராகரிக்கப்பட்டது. 
பாகிஸ்தானின் இந்த முயற்சி குறித்து பதில் அளித்துள்ள இந்தியா, இது போன்ற செயல்களை விடுத்துவிட்டு, இந்தியாவுடனான நல்லுறவை உருவாக்க தீவிரவாதிகளை பாதுகாக்கும் செயலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

credit ns7.tv