credit ns7.tv
பாமாயில் இறக்குமதியை நிறுத்தும் இந்தியாவின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு மலேசியா பெரிய நாடு இல்லை என்று அந்நாட்டு பிரதமர் மஹாதீர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மலேசிய பிரதமர் மஹாதீர் முகமது கருத்து தெரிவித்திருந்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் அவர் கருத்து கூறினார். இதையடுத்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது.

இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இது தொடர்பாக லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த மஹாதீர் முகமதுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் அளவிற்கு மலேசியா பெரிய நாடு இல்லை என்றும், இதனை சரி செய்யவதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறினார்.