மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் நகரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு திடீரென வன்முறை ஏற்பட்ட நிலையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டதில் மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரசார்தான் காரணம் என முர்ஷிதாபாத் தொகுதி எம்.பியும், காங்கிரஸ் பிரமுகருமான அதிர்ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் தாஹிருதின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக புகார் எழுந்துள்ளது. அதே நேரம் காங்கிரசாரும், கம்யூனிஸ்ட் கட்சியினருமே இந்த வன்முறைக்கு காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குறை கூறியுள்ளனர்
credit ns7.tv