புதன், 15 ஜனவரி, 2020

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து நாராயணசாமி விளக்கம்!

Image
திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை தடுக்க இந்திய பெருங்கடலில் ரோந்துப் பணி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடியை நீக்கவும் பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாகக் தெரிவித்த நாராயணசாமி, திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார் 

credit ns7.tv