வெள்ளி, 17 ஜனவரி, 2020

டெல்லி காற்று மாசு குறித்து மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் புது உத்தரவு!

Image
டெல்லியில் உள்ள முக்கிய பகுதிகளில் காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை நிறுவ உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில், டெல்லியில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியது. இதையடுத்து, வாகன கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. மாநில அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்தும், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிக்கப்படுவதை கட்டுப்படுத்த கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 
காற்று மாசு விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் தங்கள் பணிகளை தட்டிக் கழிப்பதாக நீதிபதி குற்றம்சாட்டினார். மேலும் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச அரசுகளுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காற்று மாசுவை கட்டுக்குள் வைக்க டெல்லி முழுவதும் பரவலாக காற்று  சுத்திகரிப்பான்கள் அல்லது காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை நிறுவ உத்தரவிடப்பட்டது.
credit ns7.tv