வியாழன், 23 ஜனவரி, 2020

CAA, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான கருப்பு சட்டம்: ஒவைசி

Image
குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான கருப்பு சட்டம் என அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவர் அசாதுத்தீன் ஒவைசி குற்றம்சாட்டி உள்ளார். 
மதுரை அண்ணா நகரில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்ளிட்டவற்றுக்கு எதிராக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் அசாதுத்தீன் ஒவைசி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் பேசிய ஒவைசி குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்தை மீறி உள்ளது என்றார். அந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என தமிழக மக்கள், முதல்வருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்திய மக்களை பற்றி பிரதமர் கவலைப்பட வேண்டும் என்றும், அண்டை நாட்டு மக்களை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் ஒவைசி கூறினார். 
credit ns7.tv

Related Posts: