வெள்ளி, 31 ஜனவரி, 2020

ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

இந்தியர்களை இந்தியர்கள் என்று நிரூபிக்கச் சொல்வதற்கான அதிகாரத்தை மோடிக்கு யார் கொடுத்தது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

CAA மற்றும் NRC-க்கு எதிரான பேரணி, கேரளாவின் கல்பேட்டா நகரில் நடைபெற்றது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். கல்பேட்டா நகரின் SKMJ உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, நகரின் பல்வேறு சாலைகள் வழியாகச் சென்று, மைதானத்தை அடைந்தது. 
Rahul Gandhi
அரசியல் சாசனத்தை காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய ராகுல் காந்தி, காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் கொள்கையும், நரேந்திர மோடியின் கொள்கையும் வேறு வேறு அல்ல என விமர்சித்தார்.  வேலைவாய்ப்பு பிரச்னை தலைவிரித்தாடுவது குறித்து எப்போது கேள்வி எழுப்பினாலும், மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் வேறு ஏதாவது ஒரு பிரச்னையை ஏற்படுத்துபவராக நரேந்திர மோடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
CAA மற்றும் NRC-யால் வேலை வாய்ப்பு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடுமா என்றும் ராகுல் காந்தி  கேள்வி எழுப்பினார். 

credit ns7.tv