'க்ரீன் பீஸ்' என்ற அமைப்பு இந்தியாவில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் மிகவும் காற்று மாசு அடைந்த இந்திய நகரங்களின் பட்டியலில் ஜார்க்கண்டின் ஜாரியா நகரம் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் ஜார்க்கண்டின் தன்பத்-ம், மூன்றாவது இடத்தில் நொய்டாவும் இடம் பெற்றுள்ளன.
தலைநகர் டெல்லி இந்த பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.
ஒன்று முதல் பத்து வரையிலான இடங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த நொய்டா, காசியாபாத், அலகாபாத், பரேலி, மொரதாபாத், ஃபிரோசாபாத் ஆகிய 6 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த இரண்டாண்டுகளில் டெல்லியில் காற்றின் தர அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு பட்டியலில் சென்னை மாநகரம் 179-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
credit ns7.tv