சனி, 11 ஜனவரி, 2020

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திமுக - காங்., கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் - ப. சிதம்பரம்

Image
உள்ளாட்சியில் காங்கிரசுக்கு உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் ப.சிதம்பரம் எழுதிய "அச்சமில்லை அச்சமில்லை" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ப.சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி தனது, ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே தவிர, இது மிரட்டல் அல்ல எனவும் 2021ஆம் ஆண்டு சட்டன்றத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே தங்கள் விருப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான ஒரு கேள்விக்கு கூட பாஜக இதுவரை பதில் சொல்ல தயாராக இல்லை என்றும், இந்துக்களை அனுமதிக்கும்போது நம் தொப்புள்கொடி உறவுகளான இலங்கை தமிழர்களை அனுமதிக்காதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

credit ns7.tv

Related Posts: