பாபர் மசூதி கட்ட உத்தரப்பிரதேச மாநில அரசு ஐந்து இடங்களை தேர்வு செய்துள்ளது.
அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்ட, ராம் லல்லா அமைப்பிடம் ஒப்படைக்கும்படியும், சன்னி வக்பு வாரியத்துக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதையடுத்து, பாபர் மசூதி கட்ட உத்தரப்பிரதேச அரசு ஐந்து இடங்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அயோத்தி-பைசாபாத் சாலை, அயோத்தி பாஸ்தி சாலை, அயோத்தி-சுல்தான்பூர் சாலை, அயோத்தி-கோரக்பூர் சாலை ஆகிய பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஐந்தாவதாக தேர்வு செய்யப்பட்ட இடம் பரிக்ரமா செல்லும் வழியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநில அரசு தேர்வு செய்த இடங்கள், மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
credit ns7.tv