குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு 11 மாநில முதல்வர்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 11 மாநில முதல்வர்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், குடியுரிமை சட்டத்தால், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் 11 மாநில முதல்வர்களை பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
credit ns7.tv