நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தானின் தூதரா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள், இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் போராடி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு சார்பில் விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிலிகுரியில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் பங்கேற்ற மம்தா, இந்தியாவுக்கென தனித்துவமான பாரம்பரியமும் கலாச்சாரமும் இருப்பதாக தெரிவித்தார்.
அப்படி இருக்கையில், எல்லா விவகாரத்திலும் இந்தியாவை பாகிஸ்தானோடு பிரதமர் மோடி ஏன் ஒப்பிடுகிறார் என கேள்வி எழுப்பினார். மேலும், நரேந்திர மோடி இந்தியாவுக்கு பிரதமரா அல்லது பாகிஸ்தானின் தூதரா என கேள்வி எழுப்பினார்.
credit ns7.tv