ஞாயிறு, 15 மார்ச், 2020

கொரோனா வைரஸால் அதிக பாதிப்பை சந்தித்த 25 நாடுகள்!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது வரை சுமார் 130 நாடுகளில், 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ள நிலையில் 5,400 பேருக்கு மேல் இதுவரை பலியாகியிருக்கின்றனர்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஈரானில் இந்த வைரஸை கட்டுப்படுத்த இயலாமல் அந்நாட்டு அரசுத்துறையினர் ஸ்தம்பித்து போயுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் புதிய மையமாக ஐரோப்பிய கண்டம் உருவெடுத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது, மேலும் கொரோனாவை ‘கொள்ளை’ (Pandamic) நோயாகவும் அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதாரம், கல்வி, சுற்றுலா, விமான போக்குவரத்து, ஏற்றுமதி - இறக்குமதி, விளையாட்டு நிகழ்ச்சிகள், மக்கள் கூடும் நிகழ்வுகள், அரசு நிகழ்ச்சிகள், சந்திப்புகள், கலாச்சார - இறை வழிபாட்டு நிகழ்வுகள் என அனைத்து செயல்பாடுகளும் தடைபட்டுக்கிடக்கின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய அவசர நிலையை அமெரிக்க அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இது பேரிடராக அறிவிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட 25 நாடுகள்:
 
S.No
நாடுகள்
பாதிக்கப்பட்டவர்கள்உயிரிழப்பு
1சீனா 3,189
2இத்தாலி176601266
3ஈரான்12729611
4தென் கொரியா808672
5ஸ்பெயின்5945140
6ஜெர்மனி39538
7பிரான்ஸ்366179
8அமெரிக்கா234050
9ஸ்விட்சர்லாந்து137513
10நார்வே10331
11ஸ்வீடன்8472
12நெதர்லாந்து80410
13டென்மார்க்827-
14இங்கிலாந்து79811
15ஜப்பான்75421
16ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பல்6967
17பெல்ஜியம்6894
18ஆஸ்திரியா6021
19கத்தார்337-
20ஆஸ்திரேலியா2483
21சிங்கப்பூர்200-
22மலேசியா238-
23கனடா2002
24கிரீஸ்1903
25பஹ்ரைன்211-

( Johns Hopkins University (JHU) உட்பட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன..)
credit ns7.tv