ஞாயிறு, 15 மார்ச், 2020

பரவுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் முதல் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அது பரவிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்து வருவதுடன் மேலும் பரவுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளின் வரிசையில் ஒன்றான அமெரிக்காவில், தேசிய எமெர்ஜென்ஸி நிலையை பிரகடனம் செய்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்காவில் இதுவரை கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு 49 பேர் பலியாகியுள்ளதுடன், 2,200ற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த வாரம் சனிக்கிழமையன்று அதிபர் ட்ரம்புடன்  வெளிநாட்டு தலைவர்கள், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் மேற்கு விர்ஜினியா தவிர்த்து ஏனைய அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்கும் வகையில் மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட 18 அமெரிக்க மாகாணங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source (ஆதாரம்)