வெள்ளி, 6 மார்ச், 2020

டெல்லி வன்முறை : கடும் கட்டுப்பாடுகளுக்கு கீழ் வர இருக்கும் சமூக வலைதளங்கள்!

டெல்லி வன்முறை : கடும் கட்டுப்பாடுகளுக்கு கீழ் வர இருக்கும் சமூக வலைதளங்கள்! தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் புதிய திருத்தங்கள் மூலம் இந்நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.- Credit IndianExpress.com

05.03.2020 Delhi Violence Govt plans new norms for social media platforms to check hate messages : டெல்லியில் நடைபெற்ற கலவரங்களுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள்  குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், சமூக வலைதளங்கள் தான் பொய்யான தகவல்களையும், வெறுப்பு செய்திகளையும் பரப்பும்  கூடமாக செயல்படுகிறது என்று மத்திய அரசு கருதி வருகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. மத்திய உள்துறை அமைச்சகத்தால் செவ்வாய் கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  அதில் சமூக வலைதளங்களின் பங்குகள் குறித்து பங்கிரமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டர் பக்கங்களில், பகிரப்பட்ட ட்வீட்கள் தான் வதந்திகளை பரப்புவதற்கு வசதியாக அமைந்தது என்று டெல்லி காவல்துறை ஆணையர் அறிவித்தார். உள்துறை செயலாளர்  தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐ.டி மற்றும் ஒளிபரப்புத்துறை உறுப்பினர்கள், டெல்லி காவல்துறையினர், கூகுள், ட்விட்டர், முகநூல், டிக்டாக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது. மேலும் இந்த சமூக வலைதளங்களின் வாயிலாக  தவறான செய்திகள், வெறுப்பு செய்திகள் பரப்பப்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதை திட்டவட்டமாக  அறிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகம், ஐ.டி அமைச்சகத்திற்கு “சமூக வலைதளங்கள்” தொடர்பாக முக்கிய  முடிவுகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. நாங்கள் சில ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினோம். இப்போது முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பதியப்படும் பதிவுகள் குறித்த புதிய வழிமுறைகள் பற்றியும் பேசியுள்ளோம். விரைவில் அந்த வழிமுறைகள் மற்றும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று ஐ.டி. துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வருங்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உறுதியான, வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. எந்த ஒரு சமூக வலைதளத்தினையும் தடை செய்ய முடியாது. ஆனால் சில விதிமுறைகள் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்கள் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.