ஊரடங்கை பொதுமக்கள் மதிக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதலமைச்சர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
சென்னை பெரியமேடு, ராஜா அண்ணமலைபுரம், வேளச்சேரி பகுதிகளில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களில், முதலமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார். உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், கொரோனா நோயின் தீவிரத்தை சிலர் புரிந்துகொள்ளாமல், வெளியே நடமாடி வருவதாகவும், 144 ஊரடங்கை பொதுமக்கள் இனி கடுமையாக பின்பற்ற வேண்டும், என்றும் குறிப்பிட்டார்.
தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்ததோடு, கொரோனா என்பது ஒரு கொடிய கொள்ளை நோய் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். அத்தியாவசியப் பொருட்களுக்காக தினமும் கடைகளுக்கு செல்வதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும், எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் கூடும் கூட்டத்தை தவிர்க்க, வீடுகளுக்கு டோக்கன் வழங்கும்போதே ரூ.1000 வழங்கப்படும், என்றும் முதலமைச்சர் அறிவித்தார். மேலும், பத்திரிகையாளகளுக்கும், ஊடகத்தினருக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும், என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
credit ns7.tv