credit ns7.tv
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறபிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது, அவசர தேவைக்காக செல்வோர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், மருத்துவம், திருமணம், இறப்பு ஆகிய 3 காரணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்காக இன்று காலை முதலே 200க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அனுமதி கடிதம் கொடுத்த ஒவ்வொருவரிடம் பயணத்திற்கான காரணத்தை கேட்ட பின்னரே, ஆட்சியர் அனுமதிக்கான இ-பாஸ்சை வழங்கினார்.