கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கையாள்வதற்கான அணுகுமுறைகளை உருவாக்குவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டு வரும்போது, படிப்படியாக விதிகளைத் தளர்த்துவது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்,மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்கநிலை அமலை நீட்டிக்க வேண்டும் என்பதில் மாநிலங்களுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருப்பது போல தெரிவதாகக் குறிப்பிட்டார்
தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி அறிவிப்பை ஏற்று தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்கள் குறித்து அறிவிக்க தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியதாது: இன்று காலை 11 மணி முதல் பிரதமர் மோடி பல்வேறு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார். பல்வேறு முதல்வர்களும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும், நீட்டிக்காவிட்டால் எடுத்த முயற்சிகளில் வெற்றிபெற முடியாது என்று வலியுறுத்தினர். தமிழக முதல்வர் பழனிசாமி வல்லுனர்களுடன் பேசி, பிரதமரிடம் குறைந்தது 2 வாரத்துக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பிரதமர் உடனான ஆலோசனைக்குப் பிறகு, தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
இது போன்ற ஊரடங்கு உத்தரவு ஒரு மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தினால் முழு பலனை அளிக்காது. ஊரடங்கைப் பொருத்தவரை, ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி அறிவிக்கும் முடிவை முழுமையாக செயல்படுத்துவது என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது, 21 நாட்களாக நடைபெறும் ஊரடங்குக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு அமைச்சரவை பாராட்டு தெரிவித்தார்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், “தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி; மொத்த எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47, 056 பேர் கண்கானிப்பில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 9,525 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட 485 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. ஊரடங்கை பொருத்தவரை நாடு தழுவிய அளவில் பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்று செயல்படுத்துவோம்.

தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் டெஸ் கிட் கருவிகள் அமெரிக்காவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளில் முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேரும். கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
credit indianexpress.com