ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த 6 மாநிலங்கள்!

photo
ஒருபுறம் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவல் தீவிரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இதையடுத்து குறிப்பாக கடந்த மாதம் 25ம் தேதி நள்ளிரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிகிறது. இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசைனையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா எதிரான செய்லபாடுகள் குறித்து கேடடறிந்ததாகவும், பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்ககை நீட்டிப்பது குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 
ஆனால் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக நிலையில், ஒரு நில மாநிலங்கள் தாமே முன்வந்து ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளன.   
ஒடிசா :
மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக முதலில் கடந்த ஏப்ரல் 9ம் தேதியன்று ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இகு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், கொரோனாவை எதிர்த்து போரிடுவதற்கும்,  எல்லாவற்றையும் விட மனித உயிர் முக்கியமானது என்றும், அதனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக உத்தரவு பிறபித்தார். 
பஞ்சாப் :
ஒடிசாவை தொடர்ந்து, அடுத்தப்படியாக பஞ்சாப் மாநிலம் இணந்தது. நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை மே 1ம் தேதி வரை நீட்டித்து அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது சேவைக்கான அதாவது பேருந்து உள்ளிட்ட பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  
மகாராஷ்டிரா :
கொரோனாவால் நிலைகுலைந்து காணப்படுகிறது மகாராஷ்டிரா மாநிலம். நாட்டிலேயே அதிக கொரோனா வைரஸ் நோயாளிகளை கொண்டுள்ளது. அம்மாநில அரசோ வைரஸ் தாக்கத்தை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கையை கையாள்கிறது. இந்த நிலையில் தான் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். பாதிப்பை பொறுத்து சில இடங்களில் விதிமுறைகள் கடுமையாகவும், தளர்த்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேற்கு வங்கம் :
மேற்கு வங்கமும் முழு ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜூன் 10ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளார் மாநில முதல்வர் மமதா பானர்ஜி. 
கர்நாடகா :
இந்த மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கமால் இருக்கக்கூடிய வகையில் சில தளர்வுகளையும், வேளாண் மற்றும் தொழில்துறையும் நிபந்தனையுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு ஓரிரு நாட்களில் தெளிவான விளக்கத்தை தரும் என்று முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
தெலங்கானா :
இறுதியாக தெலங்கானா மாநிலம் ஏப்ரல் 30 தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனாவை பரவலைக் குறைக்க இது ஒன்றே வழி என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளர். தெலங்கானாவில் 10ம் வகுப்பை தவிர மற்ற அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு விட்டது.
credit ns7.tv