கொரோனா வைரஸைக் கொல்வதில் கிருமிநாசினி சுரங்கங்கள் சுரங்கங்களின் செயல்திறன் குறித்து, அறிவியல்பூர்வமான சான்றுகள் இல்லை என்று நிபுணர்கள் கூறியதையடுத்து, பொது இடங்களில் கிருமிநாசினி சுரங்கங்களை அமைப்பதைத் தவிர்க்குமாறு தமிழக அரசு வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், இந்தியாவில் முதல் கிருமிநாசினி சுரங்கப்பாதை ஏப்ரல் 1-ம் தேதி திருப்பூரில் அமைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பல மாவட்டங்களும் இந்த கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைப்பை பின்பற்றின. இது போன்ற கிருமிநாசினி சுரங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கொரோனா வைரஸைக் கொல்வதற்காக மனிதர்கள் மீது தெளிக்கப்படும் கிருமிநாசினி ரசாயனங்களின்செயல்திறனைப் பற்றி வல்லுநர்கள் கவலைகளை எழுப்பினர்.
கிருமிநாசினி சுரங்கப்பாதைகளில் மனிதர்கள் மீது தெளிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைரஸைக் கொல்வதைக் காட்டிலும் தீங்கு விளைவிக்கும் என்று கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழக அரசு கோவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், நிபுணர் குழுவின் கருத்தை வெள்ளிக்கிழமை கோரியது. கிருமிநாசினி சுரங்கங்களின் செயல்திறன் பற்றி அற்வியல்பூர்வமான ஆதாரம் இருப்பதாகபுரிந்து கொள்ளப்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
நிபுணர்களின் கருத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு, வெள்ளிக்கிழமை மாலை அனுப்பிய சுற்றறிக்கையில், கிருமி நாசினி ரசாயனங்கள் அதிக அளவு பயன்படுத்தினால், கண்கள் மற்றும் சருமத்திற்கு எரிச்சல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. எந்தவொரு அறிவியல்பூர்வமான ஆய்வும் இல்லாத நிலையில், கிருமி நாசினி சுரங்கப்பாதை வழியாக சென்றால் வைரஸ் கொல்லப்படும் என்று பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும், “சோப்பு போட்டு கைகளை கழுவுவதால் வைரஸ் பரவலைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் கிருமிநாசினி சுரங்கங்களை அமைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர்கள், இத்தகைய கிருமி நாசினி சுரங்கங்களை அமைப்பது குறித்து அரசிடம் இருந்து சுற்றறிக்கை கிடைத்ததை உறுதிப்படுத்தினர். இருப்பினும், தற்போதுள்ள கிருமி நாசினி சுரங்கம் குறித்து எந்த தெளிவும் இல்லை என்று அவர்கள் கூறினர். இது குறித்து மேலும் வழிகாட்டல்களுக்கு தாங்கள் காத்திருப்பதாகவும், மேலும், புதிய சுரங்கப் பாதைகளை அமைக்க முடியாது என்றும் மாவட்ட ஆட்சியர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
கிருமிநாசினி சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் மக்கள் மீது தெளிக்கப்படும் மருந்தான 1 பிபிஎம் சோடியம் ஹைபோகுளோரைட்டின் 1 சதவீதம் ஆகும். இது அகற்றப்படும் என்று கூறப்பட்டது.
credit indianexpresscom