ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

சென்னையில் இன்று முதல் பேக்கரிகள் இயங்க அனுமதி!

சென்னையில் பேக்கரிகள் இயங்குவதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. 
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மளிகை மற்றும் காய்கறி கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பேக்கரிகளும் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஞாயிற்றுக் கிழமையிலிருந்து காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஊரடங்கால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து நியூஸ்7 தமிழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின்  கோரிக்கைகளையும் நியூஸ்7 தமிழ் தொடர்ந்து பதிவு செய்து வந்தது. இந்நிலையில் பேக்கரிகளை திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

credit ns7.tv