தமிழக்ததில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரைத்தைச் சேர்ந்த 51 வயதான நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நேற்று இரவு மூச்சு திணறல் அதிகமான நிலையில், காலை உயிரிழந்துவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளிள் படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் டெல்லி நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது 3-வதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 53 வயதான பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவர் மூலம் கொரோனோ தொற்று பரவி பாதிக்கப்பட்ட அவர், மூச்சு திணறல் அதிகமாகி மதியம் 2.25 மணியளவில் உயிரிழந்துள்ளர். மேலும் இவரின் கணவரின் நேரடி தொடர்பில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
credit ns7.tv