திங்கள், 6 ஏப்ரல், 2020

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பு - மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதே, மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பு - மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Schools reopening date : தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்...

தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதே, மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, சினிமா தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டதுடன் 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது. இதனிடையே, கடந்த 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இதன்காரணமாக, ஏப்ரல் முதல் செயல்படுவதாக இருந்த பள்ளி, கல்லூரிகளின் விடுமுறை, ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு திறக்கப்படுமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, டில்லியில் விளக்கமளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது, இந்தியாவில், 34 கோடி மாணவர்கள் உள்ளனர். இது, அமெரிக்க மக்கள்தொகையை விட அதிகம். அவர்கள் எங்களின் மிகப்பெரிய சொத்து.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம். 14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது.
14ம் தேதியன்று, அப்போதைய கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்வோம். பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதா அல்லது மேலும் சில நாட்களுக்கு மூடுவதா என்பது குறித்து 14-ந் தேதி முடிவு செய்யப்படும்.
ஒருவேளை, 14ம் தேதிக்கு பிறகும் பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து மூடுவதாக இருந்தால், மாணவர்களின் கல்வியாண்டில் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முயன்று வருகிறோம். ஏற்கனவே ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
பள்ளி, கல்லூரிகள் பின்பற்றி வரும் செயல் திட்டத்தை எனது அமைச்சகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலைமை சீரடைந்து, ஊரடங்கு விலக்கப்பட்டவுடன், நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவது ஆகிய பணிகளுக்கான திட்டம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் பதிலில், போதிய தெளிவு இல்லாததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குழப்பத்திலேயே உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
indianExpress.com