திங்கள், 1 ஜூன், 2020

சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு பரிசோதனை கட்டாயம்

சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என என தமிழக அரசு அறிவித்துள்ளது.

5ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நகர்கவுளுக்கு ஏற்ற வகையில் மண்டலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என முடிவுகள் வந்தாலும், 7 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலக ரீதியாக சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு 48 மணி நேரத்துக்குள் திரும்புவோருக்கு, தனிமைப்படுத்துதல் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.