மேற்கு வங்க பாஜக தலைவர் சுவந்தா அந்திகாரி கூறுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிந்தவுடன் சிஏஏ சட்ட விதிகளை முடிவு செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த உள்ளதாக பாஜக பதவியேற்றது முதல் தெரிவித்துவருகிறது. இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பாக சிஏஏ சட்டத் திருத்தத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். சிஏஏ தொடர்பாக பாஜக தலைவர்கள் தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. இது தொடர்பாக பாஜக தலைவர் சுவந்தா அந்திகாரி கூறுகையில், ”கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. 2024 தேர்தலுக்குளாக சிஏஏ அமலுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார். ”ராமர் கோவில் கட்டுவோம் என்று கூறினோம், அதை செய்துவிட்டோம். சிஏஏ சட்டம் என்பது எங்களது இலக்கு என்பதால் இதை விரைவாக அமல்படுத்துவோம் “ என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜூன் 18ம் தேதி, பாஜக எம்எல்ஏ அசிம் சர்கர் கூறுகையில், “ சிஏஏ சட்டம் அமல்படுத்தவில்லை என்றால், அகதிகளிடம் எங்களது செல்வாக்கு குறைந்துவிடும். மேலும் கட்சியின் மேல் உள்ள அவர்களது நம்பிக்கை பாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
எம்எல்ஏ அசிம் சர்கர் மேற்கு வங்கத்தில் உள்ள ஹரிங்கதா என்ற பகுதியிலிருந்து வெற்றிபெற்றவர். அங்கே மத்துவாக்கள், மக்கள் தொகையில் அதிகம். இந்த மாநிலம் எஸ்சி வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளில் மத்துவாக்களின் குடியுரிமையை பெற்றுத் தருவதாக பாஜக தெரிவித்துள்ளது. இதனால் சிஏஏ அமலுக்குவரவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து அமித்ஷாவுக்கு தனிப்பட எழுதி அனுப்பி உள்ளதாக என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா பல முறை சிஏஏ சட்டம் தொடர்பாக பேசியுள்ளார். இது தொடர்பாக கடந்த மே மாதம் 5ம் தேதி சிலிகுரியில் பேசியபோது, “ திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிஏஏ தொடர்பாக வதந்திகளை பரப்புகிறார்கள். கொரோனா தொற்று பரவல் குறைந்ததும், சிஏஏ கண்டிப்பாக அமலுக்கு வரும்” என்றார்.
மேலும் அசாம் தேர்தலிலும் சிஏஏ தொடர்பான பேச்சுகள் முக்கியத்துவம் பெற்றது. தேர்தலில் பாஜக வெற்றிபெற்றபோது முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில் “ சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் தொடர்பான வழிமுறைகளை அரசு தயார் செய்து வருகிறது. சட்டதிற்கான வழிமுறைகளை வரையறை செய்யும் வரை இது தொடர்பாக எதுவும் பேச இயலாது. இந்தியா அதன் அகதிகளை நிச்சயம் பாதுகாக்கும் என்றே நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/india/what-bjp-leaders-have-said-about-caa-on-last-two-years-488602/