வியாழன், 4 ஆகஸ்ட், 2022

நமது வீட்டில் எவ்வளவு பணம் மற்றும் தங்கம் வைத்திருக்கலாம்?

 

ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆண்கள் எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் என வருமானவரித்துறை குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது.

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமணமான பெண்கள் 62.5 பவுன் வரையிலான தங்க நகைகளை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். அதே சமயம் திருமணமாகாத பெண்கள் 31,25 பவுன் நகைகளை வைத்து கொள்ளலாம். ஆண்கள் 12.5 பவுன் தங்கத்தை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிகப்பட்ட வரம்பானது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை வருமான வரித்துறை அனுமதித்த வரம்புக்கு மேல் வீட்டில் தங்கம் அல்லது தங்க நகைகள் இருந்தால் அவை வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம்.

மேலும், குடும்ப பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு அதிக அளவில் உள்ள தங்கத்தை பறிமுதல் செய்யாமல் விட்டுவிடுவது மதிப்பீடு செய்யும் அதிகாரியின் விருப்பத்திற்கு உட்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே லாக்கரில் நகையை சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது.

 

இதனை வருமான வரித்துறையினர் தவறாக புரிந்து கொண்டு பறிமுதல் செய்யலாம் என்பதால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களுடைய வரம்புக்குட்பட்ட நகைகளை தனியாக அவர்களது பெயர்களைக் கொண்ட லாக்கர்களில் சேமிப்பது குழப்பத்தை தவிர்க்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்


source https://news7tamil.live/how-much-cash-and-gold-can-we-keep-in-our-house.html

Related Posts: