தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு அல்லது அரசின் உதவிப் பெறும் கல்லூரி, பள்ளிகளில் பயின்றால் இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இதேபோல் பள்ளி படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பள்ளி மேல்படிப்பு உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளது. சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்க செப்டம்பர் 9ஆம் தேதி கடைசிநாள் என சிறுபான்மையினர் நல இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகசெலுத்தப்படுகிறது. இந்நிலையில், 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி மற்றும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் http://www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் மாதம் 31ஆம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்விநிலையங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கு 1ஆம் வகுப்பு பள்ளி படிப்பு முதல், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-invites-application-for-minorities-student-scholarship-489957/