TNEA Engineering counselling which course is best?: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது. இந்தநிலையில், எந்த பாடப்பிரிவுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
பொறியியல் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டவுன் உங்களுக்கு எந்த ரவுண்ட் கவுன்சலிங் வரும் என்பது தெரிந்துவிடும். முதல் ரவுண்ட்க்கு 15000க்கும் அதிகமான மாணவர்கள் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த ரவுண்ட்களுக்கு அதிகமான எண்ணிக்கை மாணவர்கள் அழைக்கப்படுவர்.
இந்தநிலையில், மாணவர்களிடையே எழுந்துள்ள முக்கியமான கேள்வி, எந்த கோர்ஸ் படிப்பது? எந்த கோர்ஸ் படித்தால் எதிர்காலத்தில், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது? இதற்கு கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இனிவரும் காலங்களில், குறிப்பிட்ட பாடப்பிரிவு என்பதை விட, முக்கிய பாடப்பிரிவுகள் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்துள்ளதால், அனைத்து முக்கிய பாடங்களை உள்ளடக்கிய பாடப்பிரிவை, சிறந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொள்ளுங்கள். குறிப்பாக எதிர்காலத்திற்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் இன்றியமையாததாக உள்ளதால், இந்த பாடங்கள் இருக்கும் பிரிவுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
எனவே இந்த ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்கும். அதிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்து நிறைய படிப்புகள் அறிமுகமாகியுள்ளது, எனவே அதிகமானோர் படிக்க உள்ளனர். அதேநேரம் கம்யூனிகேசன் சார்ந்த வேலைவாய்ப்பு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
இந்த பாடப்பிரிவுகளுக்கு பின்னர், மெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ரூமெண்டேசன், ரோபோடிக் ஆட்டோமேசன் உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்யலாம்.
அதேநேரம் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்புவர்கள், டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு, இண்டெர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
அடுத்தப்படியாக சிவில் அல்லது மெக்கானிக்கல் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவையும் தேர்வு செய்யலாம்.
அடுத்து, கெமிக்கல், எலக்ட்ரோ கெமிக்கல், டெக்ஸ்டைல் போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
அடுத்த கட்டமாக, மெட்டரலஜி, புரடக்ஷன், இண்டஸ்ட்ரியல், ஆட்டோமொபைல், ஏரோ நாட்டிகல், மெட்டீரியல் சயின்ஸ், பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
உங்களுடைய மதிப்பெண் மற்றும் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக போகிறீர்கள் என்பதை மனதில் வைத்து, சரியான பாடப்பிரிவு மற்றும் சரியான கல்லூரிகளைத் தேர்வு செய்யுங்கள்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-engineering-counselling-which-course-is-best-494769/