திங்கள், 15 ஆகஸ்ட், 2022

தமிழகத்தில் பிரசாரம் செய்கிறது

 

தமிழகத்தில் பொய்யான பிரச்சாரம் செய்து வரும் பாஜகவினர் தமிழக அரசியலுக்கு
ஏற்றவர்கள் இல்லை. மக்கள் பாஜகவினரை நிராகரிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் என தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு வணிகர் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பட்டாசு தொழிலை தவறான தொழிலை போல்
பார்க்கிறது.

கடந்த 8 ஆண்டுகளாக பட்டாசு தொழில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பட்டாசு தொழிலை மத்திய அரசு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து காங்கிரஸ்
குரல் கொடுக்கும் என்றார்.

மேலும், பாஜக தலைவராக அண்ணாமலை வருகைக்கு பின்னர் விரும்பத்தகாத முறையில் அரசியல் நடைபெற்று வருகிறது. அரசியலில் எதிர்ப்பு தெரிவிக்க மாண்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இதுவரை பண்போடும், மாண்போடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். இதுபோன்ற விரும்பத்தக்காக நிகழ்வுகளுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். பாஜகவின் விரும்பத்தகாத அரசியல் முற்றுப்பெரும் என்பதற்கு மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கட்சியிலிருந்து விலகியது முதல் எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.

 தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரம் கிடைத்தது முதல் ஆர்எஸ்எஸ் தங்களது அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றியதில்லை. பாஜக தேசிய அடையாளங்களை தங்களது அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது. தேசிய கொடி கதர் துணியால் தயாரித்தது மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாலீஷ்டர் தேசிய கொடியால் பயன்பெற போவது அம்பானி மட்டுமே. பாஜகவிற்கும் சுதந்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்று கூறினார்.

தமிழகத்தில் பொய்யான பிரச்சாரம் செய்து வரும் பாஜகவினர் தமிழக அரசியலுக்கு
ஏற்றவர்கள் இல்லை. மக்கள் பாஜகவினரை நிராகரிப்பார்கள். எய்ம்ஸ் எப்பொழுது அமையும் என்பதை ஜப்பான் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும். ஜப்பானிடமிருந்து நிதி பெற்றால் மட்டுமே பணிகளை துவக்க முடியும். 2026ம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் அமைக்கப்படும் என ஜப்பான் உறுதி அளித்துள்ளது. ஜப்பான் அரசை நம்புவோம், மோடி அரசை நம்பினால் நாம் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.


source https://news7tamil.live/bjp-is-spreading-lies-in-tamil-nadu-mp-manikam-thakur.html