12.08.2022 Chennai Tamil News: சென்னை ஐ.ஐ.டி.யின் பவர்டெக் டெக்னலாஜிஸ் மற்றும் சோனி இந்தியா சாப்ட்வேர் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளை அளிக்கவுள்ளனர்.
பொறியியல் படிக்கும் மாணவர்கள் நம் நாட்டில் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆகையால், அனைவராலும் தங்களது துறையைச் சேர்ந்த வேலை வாய்ப்பை பெறுவது சுலபமில்லாத காரியமாக மாறிவிட்டது.
கொரோனா பெருந்தொற்று ஆரம்பிக்கும் காலத்திலிருந்து (2020இலிருந்து) பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பயிற்சியில் சேரும் தகுதி உள்ளது. இது குறித்த விவரங்களும், பயிற்சியில் சேர நினைக்கும் மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்திற்கு (https://www.iitm.ac.in/)சென்று விண்ணப்பிக்கலாம்.
“இந்த பயிற்சி பதிவிடும் மாணவர்கள் 6 மாதங்களில் கற்று பயல்பெறலாம். மேலும், பயிற்சியில் முன்னிலை பெரும் பதினைந்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்,” என்று ஐ.ஐ.டி.யின் இயக்குனர் காமகோடி கூறுகிறார்.
இந்தியாவில் கிராமப்புறத்திலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளதால், இப்பயிற்சி முடிந்தவுடன் நேர்முகத் தேர்வு, ஓர் எழுத்து தேர்வு ஆகியவை நடத்தவுள்ளனர். அதில் அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களின் பட்டியல் எடுத்து அவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். இப்பயிற்சியை கற்றுத் தேறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/chennai-tamil-news-new-course-available-for-engineering-passed-out-students-493474/