புதன், 12 ஜூலை, 2023

ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி – மத்திய நிதியமைச்சர்

 12 7 23

ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். முன்னதாக, டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

தமிழ்நாடு நிதியமைச்சராக தங்கம்  தென்னரசு பொறுப்பேற்ற பின்னர் பங்கேற்கு ம் முதல் ஜிஎஸ்டி கூட்டம் இதுவாகும். இதன்பின்னர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது..

ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செயற்கை ஜரிகை நூல்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்படும்” என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/28-percent-gst-on-online-gaming-finance-minister-nirmala-sitharaman-announced.html

Related Posts: