ஞாயிறு, 15 அக்டோபர், 2017

​அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு! October 15, 2017

​அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு!


வளி மண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வட மேற்கு திசைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்த அளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.