ஜிஎஸ்டி என்பது சுயநல வரி என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக, கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியான நவம்பர் 8ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி, மக்களை துன்புறுத்தவே விதிக்கப்பட்டு வருவதாக, மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜிஎஸ்டியால் வேலைவாய்ப்புகள் பறிபோவதுடன், பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக மம்தா புகார் தெரிவித்துள்ளார்.