சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பி வருவது குறித்து, இன்று காலை நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரியின் கரையை அரசு அதிகாரிகள் உடைத்து, உபரிநீரை, சதுப்பு நிலத்திற்கு திருப்பி விட்டனர். இதனால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுவது தடுக்கப்பட்டது.
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து, களத்தில் இருந்து, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பள்ளிக்கரணையை அடுத்த நாராயணபுரம் ஏரி நிரம்பி வருவது குறித்து, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் இன்று காலை செய்தி வெளியானது. இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்ட அதிகாரிகள், கரையை உடைத்து, ஏரியின் உபரிநீரை, சதுப்பு நிலத்திற்கு திருப்பிவிடும் நடவடிக்கையில் இறங்கினர்.
அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், அன்பழகன், வளர்மதி ஆகியோர் நேரில், ஏரிப்பகுதியை பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினர்.
ஜே.சி.பி இயந்திரம் கொண்டுவரப்பட்டு, ஏரியின் ஒரு கரையை உடைத்து, உபரிநீர் பாதுகாப்பாக சதுப்பு நிலத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், நாராயணபுரம் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்வது தடுக்கப்பட்டது. ஏரியில் இருந்து உபரிநீர் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதால்,
நாராயணபுரம் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.