தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாகை மற்றும் கடலூர் பகுதியில் அதிகபட்சமாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 7 ம் தேதி அளவில் புதிய காற்றத்தழுத்த தாழ்வு நிலை அந்தமான் பகுதியில் உருவாக வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு.மையம் தெரிவித்துள்ளது